இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பார்ட் வெளியீடு

ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி க்கு போட்டியாக, கூகுள் நிறுவனத்தின் பார்ட் அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த பார்ட் தொழில்நுட்பம் இந்தியா உள்ளிட்ட உலகின் 180 நாடுகளில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர மாநாட்டில் இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில், "நாங்கள் தொடர்ந்து எங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பல்வேறு புதிய மேம்படுத்தல்களை ஏற்படுத்தி வருகிறோம். அதே வேளையில், எங்களது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப […]

ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி க்கு போட்டியாக, கூகுள் நிறுவனத்தின் பார்ட் அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த பார்ட் தொழில்நுட்பம் இந்தியா உள்ளிட்ட உலகின் 180 நாடுகளில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர மாநாட்டில் இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில், "நாங்கள் தொடர்ந்து எங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பல்வேறு புதிய மேம்படுத்தல்களை ஏற்படுத்தி வருகிறோம். அதே வேளையில், எங்களது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருவியான பார்ட் உலக மக்கள் அனைவரின் கைகளிலும் கிடைப்பது முக்கியமாகிறது. மக்கள் இதனை பயன்படுத்தி, அவர்களது கருத்துக்களை பகிர வேண்டுகிறோம். அதன்மூலம், மென்மேலும் எங்களை மேம்படுத்திக் கொள்ள உள்ளோம். எனவே, இன்று முதல் மக்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. எங்களது பார்ட் கருவி 180 நாடுகளில் வெளியிடப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் பார்ட் அம்சத்தை இலவசமாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://bard.google.com என்ற பக்கத்தில், சோதனை முறையில் பார்ட்டை பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu