யுபிஐ தளங்களில் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு அனுமதி

March 30, 2023

கூகுள் பே, பேடிஎம், பாரத் பே, ரேசர் பே, பே யூ போன்ற யுபிஐ தளங்களில், இனிமேல் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), பிற கட்டண நிறுவனங்களுடன் இணைந்து, கிரெடிட் கார்டு பரிவர்த்தனையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கு தடை இன்றி இணைய வழி பரிவர்த்தனைகளில் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை மதிப்பு இதன் மூலம் […]

கூகுள் பே, பேடிஎம், பாரத் பே, ரேசர் பே, பே யூ போன்ற யுபிஐ தளங்களில், இனிமேல் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), பிற கட்டண நிறுவனங்களுடன் இணைந்து, கிரெடிட் கார்டு பரிவர்த்தனையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கு தடை இன்றி இணைய வழி பரிவர்த்தனைகளில் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை மதிப்பு இதன் மூலம் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரூபே கிரெடிட் கார்டுகளை யுபிஐ தளத்தில் பயன்படுத்த ஆர்பிஐ வழிவகை செய்தது. அதனைத் தொடர்ந்து, தற்போதைய அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில், கூகுள் பே, பாரத் பே, கேஷ் ஃப்ரீ பேமெண்ட்ஸ், ரேசர்பே, பேடிஎம், பே யூ, பைன் லேப்ஸ் ஆகிய யுபிஐ நிறுவனங்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், இதற்கான புதிய அம்சங்கள் யுபிஐ தளங்களில் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu