மத்திய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மின்சார வாகன பேட்டரி உற்பத்தியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் களமிறங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் 10 ஜிகாவாட் திறன் கொண்ட மேம்பட்ட வேதியியல் பேட்டரிகளை உற்பத்தி செய்ய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 3600 கோடி முதலீடு செய்ய உள்ளது.
வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் மின்சார வாகன விற்பனையை 30% ஆக அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த வகையில் இது மிக முக்கியமான திட்டமாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் மின்சார வாகன பேட்டரிகளின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.