யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு சவுண்ட் பாட் கருவி - கூகுள் பே அறிமுகம்

January 24, 2023

யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் பொழுது, பரிவர்த்தனை தொகை குறித்த அறிவிப்பை சவுண்ட் பாட் கருவி மூலம் அறிவிக்கும் சேவையை பேடிஎம், போன் பே போன்ற நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இதே போன்ற சேவையை கூகுள் பே அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலையில், டெல்லி உள்ளிட்ட வட இந்திய நகரங்களில், கூகுள் பே இந்த சவுண்ட் பாட் கருவியை சோதனை முறையில் அறிமுகம் செய்துள்ளது. கூகுள் பே நிறுவனத்தின் சவுண்ட் பாட் […]

யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் பொழுது, பரிவர்த்தனை தொகை குறித்த அறிவிப்பை சவுண்ட் பாட் கருவி மூலம் அறிவிக்கும் சேவையை பேடிஎம், போன் பே போன்ற நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இதே போன்ற சேவையை கூகுள் பே அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலையில், டெல்லி உள்ளிட்ட வட இந்திய நகரங்களில், கூகுள் பே இந்த சவுண்ட் பாட் கருவியை சோதனை முறையில் அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் பே நிறுவனத்தின் சவுண்ட் பாட் கருவி, அமேசானின் டோன் டாக் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலம், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் எளிமையாக்கப்படும் என்று கருதப்படுகிறது. பணப்பரிவர்த்தனையில் ஏற்படும் சிக்கல்களை இது களையும் என்று நம்பப்படுகிறது. இந்த சவுண்ட் பாட் கருவி கியூ ஆர் கோடு ஒன்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. கியூ ஆர் கோடு, குறிப்பிட்ட வணிகரின் கூகுள் பே வணிக கணக்குடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu