விதிகளை மீறியதால், கூகுள் பிளே ஸ்டோரில் 1.43 மில்லியன் செயலிகள் முடக்கம்

கூகுள் நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் தனி உரிமைக் கொள்கைகளை பின்பற்ற தவறியதால், கிட்டத்தட்ட 1.43 மில்லியன் செயலிகளை, ப்ளே ஸ்டோரில் இடம்பெற தவிர்த்ததாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2022 ஆம் ஆண்டின் நிலவரம் ஆகும். இது தொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “சைபர் தாக்குதலை ஏற்படுத்தும் வகையிலான கணக்குகள் மற்றும் மோசடி செயலிகள் போன்றவை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதன் படி, 173000 மோசடி கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன், […]

கூகுள் நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் தனி உரிமைக் கொள்கைகளை பின்பற்ற தவறியதால், கிட்டத்தட்ட 1.43 மில்லியன் செயலிகளை, ப்ளே ஸ்டோரில் இடம்பெற தவிர்த்ததாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2022 ஆம் ஆண்டின் நிலவரம் ஆகும்.

இது தொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “சைபர் தாக்குதலை ஏற்படுத்தும் வகையிலான கணக்குகள் மற்றும் மோசடி செயலிகள் போன்றவை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதன் படி, 173000 மோசடி கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மோசடி பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு தளத்தில் தனது பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்துள்ளதாக, கூகுள் தெரிவித்துள்ளது. மேலும், “அதிக பாதுகாப்பு கோரும் தரவுகளை அணுகுவதற்கான அனுமதி, அதிக கவனமுடன் வழங்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில், 5 லட்சத்திற்கும் அதிகமான செயலிகளுக்கு இதுபோன்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu