கூகுள் பிக்சல் ஃபோல்ட் - மடக்கு கைப்பேசி விரைவில் அறிமுகம்

கூகுள் நிறுவனம், தனது முதல் மடக்கு கைபேசியை மே 10ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், மடக்கு கைபேசி தொடர்பான வீடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ‘கூகுள் பிக்சல் ஃபோல்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கைபேசியின் வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஐ/ஓ நிகழ்வில் பிக்சல் ஃபோல்ட் மடக்கு கைபேசி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கைபேசியின் விலை சாம்சங் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா மாடல் கைப்பேசியின் […]

கூகுள் நிறுவனம், தனது முதல் மடக்கு கைபேசியை மே 10ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், மடக்கு கைபேசி தொடர்பான வீடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ‘கூகுள் பிக்சல் ஃபோல்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கைபேசியின் வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் ஐ/ஓ நிகழ்வில் பிக்சல் ஃபோல்ட் மடக்கு கைபேசி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கைபேசியின் விலை சாம்சங் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா மாடல் கைப்பேசியின் விலைக்கு நிகராக இருக்கும் என்று கூறப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் மடக்கு கைபேசியில் பல புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கைப்பேசியின் பிரதான திரை 7.6 இன்ச் அளவுடையதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், செகண்டரி டிஸ்ப்ளே 5.8 இன்ச் திரை அளவை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், பிரீமியம் ரக கைபேசியான இதில், ட்ரிபிள் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu