இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து ஏற்றம் பதிவாகி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் வரலாற்று உச்சம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 78674.25 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 23868.8 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளன. பங்குச்சந்தையின் ஏற்றப்போக்கு தொடர்ந்து நீடிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இன்றைய வர்த்தகத்தில், இந்தியா சிமெண்ட், ரேமண்ட், வோடபோன், ஜி எம் ஆர் இன்ஃப்ரா, ரிலையன்ஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி, டி சி எஸ், ஐ டி சி அமரராஜா பேட்டரிஸ் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், வேதாந்தா, எஸ் வங்கி, சுஸ்லான் எனர்ஜி, எச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், அதானி பவர் ஆகியவை சரிவடைந்துள்ளன.