வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல், 5 கோடிக்கு அதிகமான வருடாந்திர வருவாய் (டர்ன் ஓவர்) கொண்டிருக்கும் நிறுவனங்கள் இ - இன்வாய்ஸ்களை சரி பார்ப்பது கட்டாயமாக்கப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஜிஎஸ்டி வரி ஏய்ப்புகள் வெகுவாக குறைக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும், நிதி மோசடிகள் பன்மடங்கு குறையும்; அத்துடன், வர்த்தக நடைமுறை எளிதாக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், 10 கோடிக்கு அதிகமான டர்ன் ஓவர் கொண்டுள்ள நிறுவனங்கள் மட்டுமே இ இன்வாய்ஸ் சமர்ப்பித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூல் வரலாற்று உச்சமாக பதிவானது. அதைத் தொடர்ந்து, சிறிய நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி முறையை அமல்படுத்த, இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசாங்கத்திற்கு ஜிஎஸ்டி வரி வசூல் மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், வரி ஏய்ப்புகளை தடுக்க, 2 மாத கால செயல்திட்டம் ஒன்றை ஜிஎஸ்டி அதிகாரிகள் தொடங்க உள்ளனர். வரும் மே 16ஆம் தேதி இந்த நடவடிக்கை தொடங்கப்பட உள்ளது.