காவல்நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களை அரசு அனுமதிக்காது - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

March 29, 2023

காவல்நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களை அரசு அனுமதிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கைதிகளின் பல் பிடுங்கிய அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி குறித்து சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதிமுக, பாமக, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் […]

காவல்நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களை அரசு அனுமதிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கைதிகளின் பல் பிடுங்கிய அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி குறித்து சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதிமுக, பாமக, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். சார் ஆட்சியர் தலைமையில் நடக்கும் விசாரணையின் முழு அறிக்கை வந்ததும் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்தவித சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu