இந்தியாவில் தயாரிக்கப்படும் அரசு லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களை கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடி இன்று 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் காணொலி வாயிலாக அவர் பேசியதாவது, உள்ளூர் வேலைவாய்ப்பு, தயாரிப்புகளை ஊக்கப்படுத்தும் விதமாக இந்தியாவில் தயாரிக்கப்படும், அரசு லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களை கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்தப்படும். மேலும் ஆட்டோமொபைல்ஸ், மருத்துவ துறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. வரும் காலங்களில் அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.