தகுதியான நுகர்வோருக்கு பால் அட்டை வழங்க ஆவின் நிர்வாகத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாக கொழுப்பு சத்து அடிப்படையில் பால் தரம் பிரிக்கப்பட்டு சிவப்பு, ஆரஞ்ச், பச்சை, நீலம் ஆகிய வண்ணங்களில் விற்கப்படுகிறது. மாநிலம் முழுதும் 11 லட்சம் ஆரஞ்சு பால் அட்டைகள் நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை ஆவினிடம் மொத்தமாக பால் கொள்முதல் செய்யும் முகவர்கள் அதிகம் வைத்துள்ளனர்.
இதனால் நுகர்வோருக்கு ஆரஞ்சு பால் அட்டைகளை வழங்க வேண்டாம் என ஆவின் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், புதிய பால் அட்டைகளை கேட்டு ஆவின் பாலகங்கள் மற்றும் மண்டல ஆவின் அலுவலகங்களுக்கு செல்லும் நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்நிலையில் ஆதார், ரேஷன் கார்டு வைத்துள்ள தகுதியான நபர்களுக்கு ஆரஞ்ச் பால் அட்டைகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.