இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுவதை மத்திய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

October 11, 2022

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுவதை மத்திய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 96 சதவீதத்திற்கும் அதிகமாக போடப்பட்டுள்ளது. 2வது தவணை கொரோனா தடுப்பூசி 91 சதவீதத்திற்கும் அதிகமாக போடப்பட்டுள்ளது. எனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுவதை மத்திய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும் என்றார் . மேலும், தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி […]

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுவதை மத்திய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 96 சதவீதத்திற்கும் அதிகமாக போடப்பட்டுள்ளது. 2வது தவணை கொரோனா தடுப்பூசி 91 சதவீதத்திற்கும் அதிகமாக போடப்பட்டுள்ளது. எனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுவதை மத்திய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும் என்றார் .

மேலும், தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி மக்கள் இயக்கமாகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 316 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது. எச்1 என்1 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது. சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் காய்ச்சல் பாதிப்பு மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. மருத்துவ முகாம்களில் 19.71 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu