சக்தி இசைக்குழு மற்றும் 5 இந்தியர்களுக்கு கிராமி விருது அறிவிப்பு

February 6, 2024

நிகழாண்டிற்கான கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் 5 இந்தியர்களுக்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. கடம் வாத்திய இசைக் கலைஞர் செல்வகணேஷ் விநாயக்ராம், தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன், பாடகர் சங்கர் மகாதேவன், வயலின் இசைக்கலைஞர் கணேஷ் ராஜகோபாலன், புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஹரிபிரசாத் சௌராஷியாவின் உறவினர் ராகேஷ் சௌராஷியா ஆகிய ஐவரும் கிராமி விருது வென்றுள்ளனர். இதில், […]

நிகழாண்டிற்கான கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் 5 இந்தியர்களுக்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.

கடம் வாத்திய இசைக் கலைஞர் செல்வகணேஷ் விநாயக்ராம், தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன், பாடகர் சங்கர் மகாதேவன், வயலின் இசைக்கலைஞர் கணேஷ் ராஜகோபாலன், புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஹரிபிரசாத் சௌராஷியாவின் உறவினர் ராகேஷ் சௌராஷியா ஆகிய ஐவரும் கிராமி விருது வென்றுள்ளனர். இதில், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், சங்கர் மகாதேவன் மற்றும் ஜாகிர் ஹுசைன் ஆகியோர் சக்தி என்ற இசை குழுவில் உள்ளனர். சக்தி இசைக்குழுவின் ‘திஸ் மொமெண்ட்’ என்ற இசை ஆல்பத்துக்காக கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பாஷ்தோ என்ற இசை ஆல்பத்துக்கும், ‘ஆஸ் வீ ஸ்பீக்’ என்ற ஆல்பத்திற்கும் ஜாகிர் உசேனுக்கு தனியாக 2 கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu