உலகிலேயே பிரமாண்டமான சூரத் வைர பங்குச்சந்தையை பிரதமர் மோடி டிசம்பர் 17ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
இந்தியாவின் வைர தொழில் நகரமாக குஜராத்தில் சூரத் நகரம் திகழ்ந்து வருகிறது. இங்கு உலகில் உள்ள 90 சதவீத வைரங்கள் பட்டை தீட்டப்பட்டு வருகின்றன. மேலும் வைரத்தை வெட்டுவது, பட்டை தீட்டுவது உள்ளிட்ட வியாபாரத்தில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் விதமாக சூரத் வைர பங்குச் சந்தை கட்டப்பட்டுள்ளது. இது 35 ஏக்கர் நிலப்பரப்பில் 15 மாடிகளை கொண்டு 9 செவ்வக வடிவமைப்புகளாக கட்டப்பட்டுள்ளது. இதற்கான மொத்த பட்ஜெட் ரூபாய் 3000 கோடியாகு.ம் உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை மிஞ்சும் வகையில் இது உள்ளது. மேலும் இந்த வைரப் பங்குச் சந்தையை டிசம்பர் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இதில் 4700 அலுவலகங்களையும், கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பு வைர நிறுவனங்கள் வாங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.