எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு இலங்கையில் அனுமதி கிடைத்துள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இது பற்றிய அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்குவதற்கான அனுமதியை, இலங்கையின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வழங்கி உள்ளது. இது இலங்கை வரலாற்றில் புதிய புரட்சியை ஏற்படுத்தும். கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த முன்னேற்றங்கள் பதிவாகும். இளைஞர்கள் மிகவும் பயனடைவர். பேரிடர் காலங்களில் மிகவும் துணை புரிவதாக இருக்கும். - இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவின் எக்ஸ் பதிவு கூறுகிறது. ஏற்கனவே, 71 நாடுகளில் ஸ்டார்லிங்க் நிறுவனம் இணைய சேவை வழங்குவது குறிப்பிடத்தக்கது.