தமிழ்நாட்டில் குரூப்-2 தேர்வு இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப்-2 தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. இதில், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா், சார்பதிவாளா் போன்ற பதவிகளுக்கான 2,327 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும். 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7,93,966 பேர் தேர்வு எழுத உள்ளனர். ஒவ்வொரு மையத்திற்கும் ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தேர்வின் முறையான நடைமுறை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.