இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தனது 100வது ஏவுதல் திட்டத்தை ஜனவரியில் திட்டமிட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி ஏவு வாகனம் மூலம் இந்த ஏவுதல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, டிசம்பர் 30 அன்று பிஎஸ்எல்வி-சி60 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ 99வது ஏவுதலை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த 100வது ஏவுதல் இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த ஏவுதலின் மூலம், என்விஎஸ்-02 நேவிகேஷன் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது இந்தியாவின் இரண்டாம் தலைமுறை வழிசெலுத்தல் அமைப்பிற்கான முக்கியமான செயற்கைக்கோள் ஆகும். மேலும், இஸ்ரோ விரைவில் ஸ்பேஸ் டாகிங் எக்ஸ்பெரிமெண்ட் என்ற சாதனையை நிகழ்த்த உள்ளது.