மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிப்பு

February 18, 2023

இன்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் இறுதியில், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை சுமார் 16982 கோடியை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை அனைத்தும் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், திரவச் சர்க்கரை, பென்சில் சார்ப்னர் மற்றும் குறிப்பிட்ட சில கண்காணிப்பு கருவிகள் ஆகியவை மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி […]

இன்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் இறுதியில், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை சுமார் 16982 கோடியை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை அனைத்தும் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், திரவச் சர்க்கரை, பென்சில் சார்ப்னர் மற்றும் குறிப்பிட்ட சில கண்காணிப்பு கருவிகள் ஆகியவை மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

உத்திரப் பிரதேசம் சார்ந்த பகுதிகளில், ரப் என்ற பெயரில் திரவ நிலையில் உள்ள சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இதற்கான ஜிஎஸ்டி வரி 18% இருந்து 5% மற்றும் 0% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனை பாக்கெட்டுகளில் பேக் செய்து விற்கும் பட்சத்தில் 5% வரியும், லூசாக விற்கும் பட்சத்தில் 0% வரியும் நிர்ணயம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சார்பனர்களுக்கான வரி 18% இருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu