குகேஷ் FIDE தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறி இந்தியாவின் முன்னணி வீரர் ஆகியுள்ளார்.
உலக செஸ் சாம்பியன் குகேஷ் FIDE தரவரிசையில் அதிவேகமாக முன்னேறி தற்போது நான்காவது இடத்தில் உள்ளார், இதன் மூலம் அவர் இந்தியாவின் முன்னணி செஸ் வீரராக மாறியுள்ளார். தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் குகேஷ் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து 2784 புள்ளிகளுடன் முன்னேற்றம் கண்டுள்ளார்.
இந்நிலையில், குகேஷ் FIDE தரவரிசையில் 2779.5 புள்ளிகளுடன் இருந்த அர்ஜூன் எரிகைசியை தள்ளி முன்னேறினார். உலகளவில், நார்வேவின் மேக்னஸ் கார்ல்சன் 2832.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2023-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் உலக பட்டத்தை வென்ற குகேஷ், தற்போது சிறந்த ஃபார்மில் விளையாடி வருகிறார்.