இந்திய அளவில் பிரபலமான தின்பண்ட தயாரிப்பு நிறுவனம் ஹால்டிராம் ஸ்நாக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகும். இந்த நிறுவனம் ஐ பி ஓ வெளியிடுவது பற்றி திட்டமிட்டு வருகிறது.
ஹால்டிராம் நிறுவனத்தை வெளிநாட்டினருக்கு விற்பது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட 12 மில்லியன் டாலர்களுக்கு நிறுவனத்தை விற்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால், 8 முதல் 8.5 பில்லியன் டாலர்களுக்கு மட்டுமே நிறுவனத்தை வாங்க வெளிநாட்டினர் முன் வந்தனர். எனவே, அந்த திட்டத்தை கைவிட்டு, ஐபிஓ மூலம் நிதி திரட்ட உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ஐபிஓ திட்டம் உறுதியாகும் பட்சத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.














