பிலிப்பைன்சில் புயல் கரையை கடந்தது.
பிலிப்பைன்சில் புதிய வெப்ப மண்டல புயலின் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. பிகோல் நகரில் புயல் கரையை கடந்தபோது மணிக்கு 215 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. தொடர்ந்து பெய்த கனமழையால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 2.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். வெள்ளம் அதிகமாக பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பல மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.