ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை விட ஹமாஸ் அமைப்பு மோசமானது என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர்
லாயின் ஆஸ்டின் குறிப்பிட்டார்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயின் ஆஸ்டின் நேற்று இஸ்ரேல் சென்றார். இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவை உறுதிப்படுத்துவதற்காக அவர் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த போர் குறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் கூறுகையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை விட ஹமாஸ் அமைப்பு மோசமானது என்று குறிப்பிட்டார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படும் என்றும் கூறினார்.
முன்னதாக ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 27 அமெரிக்கர்கள் பலியாகினர். இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடென் கூறுகையில் அல்கொய்தாவை விட பயங்கரமான அமைப்பு ஹமாஸ். பாலஸ்தீனத்தின் பெரும் பகுதி மக்கள் ஹமாசுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா பெரிய போர்க்கப்பலை இஸ்ரேல் கடற்பகுதியில் நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.