மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஏலத்திற்கு முன்பாக ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அதன்படி ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது. இதனால் குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வந்தார். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை கோப்பை வென்றுள்ளது.














