ஹெச்டிஎஃப்சி வங்கி நிகரலாபம் 20% உயர்வு

April 15, 2023

ஹெச்டிஎஃப்சி வங்கி தனது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் 12594.47 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 20.6% உயர்வாகும். கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், வங்கியின் நிகர லாபம் 12698.32 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒட்டுமொத்தமாக, கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், வங்கியின் லாபம் 45997.11 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. இது 2022 ம் நிதியாண்டில் 38052.75 […]

ஹெச்டிஎஃப்சி வங்கி தனது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் 12594.47 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 20.6% உயர்வாகும். கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், வங்கியின் நிகர லாபம் 12698.32 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒட்டுமொத்தமாக, கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், வங்கியின் லாபம் 45997.11 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. இது 2022 ம் நிதியாண்டில் 38052.75 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் மொத்த வருவாய் 53850 கோடி ஆக உயர்ந்துள்ளது. கடந்த வருடம், இது 41086 கோடி ஆக பதிவாக இருந்தது. அதே வேளையில், கடன்கள் மற்றும் இதர செலவுகளின் மதிப்பு 2685.37 கோடியாக குறைந்துள்ளது. மேலும், வங்கியின் பயன்பாட்டில்லா சொத்துக்களின் மதிப்பு 1.12% ஆக குறைந்துள்ளது. இது கடந்த வருடம் 1.17% ஆகவும், கடந்த காலாண்டில் 1.23% ஆகவும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu