ஹெச்டிஎஃப்சி நிறுவனத்துடன் ஹெச்டிஎஃப்சி வங்கி இணைக்கப்பட்ட பிறகு, தற்போது, முக்கிய நகர்வாக, உயர்மட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
ஹெச்டிஎஃப்சி வங்கியின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் வர்த்தக முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, உயர்மட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி சசிதர் ஜெகதீசனுக்கு நேரடி கீழாக ரமேஷ் லட்சுமி நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஷிஷ் பார்த்தசாரதி வங்கியின் முக்கிய கிளை வர்த்தக பொறுப்பை ஏற்க உள்ளார். ஸ்மிதா பகத் மற்றும் சம்பத்குமார் ஆகியோரும் புதிய தலைமை பொறுப்புகளை ஏற்க உள்ளனர்.