தமிழ்நாட்டில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.
சென்னை சைதாப்பேட்டையில், மருத்துவர் மா. சுப்பிரமணியன் மருத்துவ முகாமை தொடங்கினார். இதில் "வடகிழக்கு பருவமழைக்கு எதிராக, தமிழ்நாடு சுகாதாரத் துறை தயார் நிலையில் உள்ளது" என்றார். அதன்படி வரும் 15-ந்தேதி தமிழகத்தில் 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது, இதுவரை 2 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர். மேலும் "இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்" எனவும் கூறினார். இது தவிர மக்கள், வீட்டின் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளார்.














