அடுத்த வருடம் முதல் பவர் ஹவுஸ் - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை

January 29, 2024

கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் - பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மூன்று வழி தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் சுரங்கப்பாதையாகவும், உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்பட உள்ளன. இதில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று […]

கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் - பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மூன்று வழி தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் சுரங்கப்பாதையாகவும், உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்பட உள்ளன. இதில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தடத்தில் ஒரு பகுதியான கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் - பூந்தமல்லி இடையேயான உயர்மட்ட பாதையில் 811 தூண்கள் அமைக்க வேண்டும். இதில் 598 தூண்கள் முடிவடைந்துள்ளன. இதற்கான பணிகள் முழுவீச்சு நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் உயர்மட்ட பாதையில் 18 ரயில் நிலையங்களில் 13 ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரமடைந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடைய வாய்ப்புள்ளது. மேலும் மக்கள் பயன்பாட்டிற்காக 2025 ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu