மே ஆறாம் தேதி வரை தமிழகத்தில் வெப்ப அலை தாக்கம்

தமிழகத்தில் மே 6 ஆம் தேதி வரை வெப்ப அலை தாக்கம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை காணாத அளவு வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதில் வெயிலில் தாக்கம் அதிகபட்சமாக 111 டிகிரி வரை இருந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காளம்,ஒடிசா, பீகார், டெல்லி போன்ற மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. […]

தமிழகத்தில் மே 6 ஆம் தேதி வரை வெப்ப அலை தாக்கம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை காணாத அளவு வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதில் வெயிலில் தாக்கம் அதிகபட்சமாக 111 டிகிரி வரை இருந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காளம்,ஒடிசா, பீகார், டெல்லி போன்ற மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் இரண்டு முதல் ஐந்து டிகிரி வரை இயல்பை விட அதிகமான வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது. மேலும் வெப்பநிலை இன்றும், நாளையும் அதிகமாக இருக்கும் எனவும், ஒரு சில மாவட்டங்கள் 110 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் மே 6ஆம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், வேலூர், திருத்தணி ஆகிய பகுதிகளில் வெயில் மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மழை பெய்யும் பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறையும். மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் தென் தமிழகத்தில் கோடை மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu