மதுரையில் கனமழை - நூற்றுக்கணக்கான மரங்கள் சரிந்தன

மதுரையில் நேற்று திடீரென கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக, மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் சரிந்து விழுந்துள்ளதாகவும், போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. ஆரப்பாளையத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மரம் விழுந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. அது போல, பொன்னகரம் பகுதியில் மின் கம்பத்தை சரித்து மரமும் சேர்ந்து விழுந்துள்ளது. ஆனால், இதன் காரணமாக பாதிப்புகள் எதுவும் நேரவில்லை என கூறப்படுகிறது. […]

மதுரையில் நேற்று திடீரென கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக, மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் சரிந்து விழுந்துள்ளதாகவும், போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

ஆரப்பாளையத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மரம் விழுந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. அது போல, பொன்னகரம் பகுதியில் மின் கம்பத்தை சரித்து மரமும் சேர்ந்து விழுந்துள்ளது. ஆனால், இதன் காரணமாக பாதிப்புகள் எதுவும் நேரவில்லை என கூறப்படுகிறது. அத்துடன், பல்வேறு சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். எனவே, வெள்ள நீர் வடிகால் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி, மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu