கேரளாவில் கனமழை எச்சரிக்கை

October 16, 2023

கேரளாவில் நாளை மறுநாள் வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கேரளாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மழை விடாமல் பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். பொதுமக்கள் தங்குவதற்காக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை திருவனந்தபுரம் தாலுகாவில் 16 […]

கேரளாவில் நாளை மறுநாள் வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கேரளாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மழை விடாமல் பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். பொதுமக்கள் தங்குவதற்காக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை திருவனந்தபுரம் தாலுகாவில் 16 முகாம்களில் 550பேர், சீராயின் கீழ் தாலுகாவில் 4 முகாம்களில் 245 பேர் வர்க்கலா தாலுகாவில் உள்ள முகாமில் 47 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 21 நிவாரண முகாம்களில் மொத்தம் 900 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவர்களுக்கான அடிப்படை வசதி உணவு ஆகியவற்றை செய்து கொடுக்க கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இன்னும் பல மாவட்டங்களில் நாளை மறுநாள் வரை கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu