சேலம் நாமக்கல் மாவட்டங்களில் விடிய விடிய மழை

August 10, 2023

நேற்று காலை திடீரென சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது சேலம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை இரவு முழுவதும் பெய்தது. இதில் வீரகனூர், கெங்கவல்லி, ஏற்காடு காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் ஆத்தூர் வீரகனுரில் ஏழு சென்டிமீட்டர் அளவில் மழை பதிவாகியுள்ளது. மேலும் இந்த திடீர் மழை பயிர்கள் விளைச்சலுக்கு உதவும் […]

நேற்று காலை திடீரென சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது சேலம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை இரவு முழுவதும் பெய்தது. இதில் வீரகனூர், கெங்கவல்லி, ஏற்காடு காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் ஆத்தூர் வீரகனுரில் ஏழு சென்டிமீட்டர் அளவில் மழை பதிவாகியுள்ளது. மேலும் இந்த திடீர் மழை பயிர்கள் விளைச்சலுக்கு உதவும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் குமாரபாளையம், மங்கல புரம், நாமக்கல், புதுச்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதில் பள்ளிபாளையம், கொக்கராயன்பட்டி அருகில் இருந்த 50 ஆண்டுகால ஆலமரம் சாய்ந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu