பாகிஸ்தானில் கனமழை காரணமாக 34 பேர் பலி

June 12, 2023

பாகிஸ்தானில் கனமழை காரணமாக 34 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழை காலமாகும். இந்நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் கைபர் பக்தூங்வா மாகாணம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அந்த மாகாணத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பானு, திகான், லக்கி மார்வாட், கராக் ஆகிய 4 மாவட்டங்களில் வீடு, சுவர், மரம் விழுந்து இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 200 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 100-க்கும் […]

பாகிஸ்தானில் கனமழை காரணமாக 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழை காலமாகும். இந்நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் கைபர் பக்தூங்வா மாகாணம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அந்த மாகாணத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பானு, திகான், லக்கி மார்வாட், கராக் ஆகிய 4 மாவட்டங்களில் வீடு, சுவர், மரம் விழுந்து இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 200 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. நிவாரண பணிகளை மேற்கொள்ள கைபர் பக்தூங்வா மாகாண அரசு சார்பில் இந்திய மதிப்பில் ரூ.1.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu