கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கு நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஓமன் நாட்டில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இதுவரை 18 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், தற்போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை பெய்து வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை நீடித்து வருகிறது. துபாய் நகரை இணைக்கும் பல்வேறு சாலைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அமீரகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன், அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அமீரகம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்வது மிகவும் அபூர்வமாகும். அந்த வகையில், தற்போது பெய்து வரும் கனமழை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவசரக் கால நடவடிக்கைகளை அதிகாரிகள் முனைப்புடன் மேற்கொண்டு வருகின்றனர்.