முன்கூட்டியே பெய்த பருவமழையால் இமாசல பிரதேசம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மாநிலம் முழுவதும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இமாசல பிரதேசத்தில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரமுழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகள், மின் இணைப்புகள் மற்றும் சாலை சேதம் போன்ற தாக்கங்கள் உருவாகின. வருவாய் மற்றும் பழங்குடி வளர்ச்சித்துறை மந்திரி ஜெகத் சிங் நேகி தெரிவித்ததின்படி, மழை சம்பவங்களில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். தரம்சாலாவில் மட்டும் வெள்ளத்தில் 9 பேர் சிக்கி உள்ளனர். மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட மொத்த சேத மதிப்பு சுமார் ₹300 கோடி என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.














