சிம்லாவில் அதிக பனிப்பொழிவு காரணமாக 4 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள சிம்லா, அதன் குளிர்ந்த வானிலை மற்றும் அழகான மலைக் காட்சிகளுக்காக முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஒட்டி அமைந்த சிம்லாவில், இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடினர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது, சிம்லா அருகிலுள்ள 223 சாலைகள், 3 தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட, மாநில அரசால் மூடப்பட்டுள்ளன. இந்த நெரிசலில், சிம்லாவிற்கான செல்லும் பயணிகள் பல வாகன விபத்துக்களில் சிக்கினார்கள், இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வானிலை மையம், வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை உச்ச பனிப்பொழிவு இருக்கும் என தெரிவித்துள்ளது.