அமெரிக்காவில் நேற்று கடும் பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பனிப்பொழிவால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் 2 அடி அளவிற்கு பனி படர்ந்துள்ளது. மேலும், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க வரலாற்றில், இந்த வருடம் அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட சில பகுதிகளில், இனி வரும் நாட்களில், பனிப்புயல் மேலும் தீவிரமடையும் என்று இந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவு காரணமாக, இன்று பயணப்பட வேண்டிய 1550 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சாலைகளில் பனி நிரம்பி உள்ளதால், சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 280000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கடும் குளிரைத் தாக்குப் பிடிக்க முடியாமல் மக்கள் திணறி வருவதாக கூறப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் பனிப்பொழிவு அதிகரிக்க கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.














