மங்கோலியா நாட்டில் பனிப்புயல் காரணமாக சுமார் 70 லட்சம் கால்நடைகள் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
மங்கோலியாவில் தற்போது இயல்பை காட்டிலும் அதிகமாக பனிப்புயல் வீசுகிறது. ரஷ்யா, சீனா மற்றும் திபத்திற்கு இடையே மங்கோலியா உள்ளது. இங்கு ஆண்டுக்கு 10 மாதங்கள் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் அளவில் குளிர்ந்த வானிலை நிலவும். இந்நிலையில் மங்கோலியாவில் தற்போது இயல்பை காட்டிலும் அதிகமாக பனிப்புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக அங்கு கடும் பனிப்பொழிவு ஏற்படுகிறது. அந்த நாடு முழுவதும் பனியால் உறைந்து உள்ளது. இந்த பனிப்புயலுக்கு அங்குள்ள மேய்ச்சல் நிலங்கள், விளை நிலங்கள் ஆகியவை பாதிப்படைந்துள்ளன. எனவே உணவு உற்பத்தி செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடுமையான வறட்சி காரணமாக உணவு பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சுமார் எழுபது லட்சம் கால்நடைகள் பலியாகி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.














