நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து ரசுவா நோக்கி சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் தீயில் கருகி பலியாகி உள்ளனர். இது தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, காட்மாண்டுவில் இருந்து ஹெலிகாப்டர் ரசுவா நோக்கி சென்று கொண்டிருந்தபோது நுவா கோட் என்னும் மாவட்டத்தில் உள்ள சூர்யா சவுர் 7 என்ற மலை மீது மோதியது. அப்பொழுது விமானம் நொறுங்கி தீ ஏற்பட்டது. இந்த தீயில் ஐந்து பேர் உடல் கருகி பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட மூன்று நிமிடங்களில் தொடர்பை இழந்துள்ளது.