கர்நாடகா - ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலை - பிரதமர் தொடங்கி வைப்பு

February 6, 2023

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில், ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலை தொடங்கப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் இந்த ஆலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது, கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்து, தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பசுமை ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலை, இந்திய ராணுவத் துறையில் தற்சார்பை எட்டும் நோக்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குத் தேவையான அனைத்து ஹெலிகாப்டர்களும் […]

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில், ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலை தொடங்கப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் இந்த ஆலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது, கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்து, தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பசுமை ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலை, இந்திய ராணுவத் துறையில் தற்சார்பை எட்டும் நோக்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குத் தேவையான அனைத்து ஹெலிகாப்டர்களும் இந்த ஆலையிலேயே தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் பல்நோக்கு ஒற்றை எஞ்சின் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், போர் ஹெலிகாப்டர்கள், மல்டி ரோல் ஹெலிகாப்டர்கள் ஆகியவையும் இங்கு தயார் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு, ஆரம்ப நிலையில் ஆண்டொன்றுக்கு 30 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும் எனவும், இந்த எண்ணிக்கை 60, 90 என்று அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த 20 ஆண்டுகளில், 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், 3 டன் முதல் 15 டன் எடை வரையிலான 1000 ஹெலிகாப்டர்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu