இஸ்ரேலின் ராணுவ தலைமையகத்தின் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளது
இஸ்ரேல் சமீபத்தில் ஹிஸ்புல்லா தளபதி ஒருவரை தாக்கி கொன்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹிஸ்புல்லா ஆயுதப்படை இஸ்ரேல் ராணுவ தலைமையகத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதனை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது. வடக்கு இஸ்ரேல் பகுதியில் உள்ள இஸ்ரேல் நிலைகளில் ஒன்றின் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதில் எவரும் காயம் அடையவில்லை எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் ராணுவம் இது குறித்து தெரிவித்துள்ளது. அதோடு நேற்று லெபனானில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று ஹிஸ்புல்லா படையினர் பலியாகி உள்ளனர். இஸ்ரேலின் வடக்கு பகுதியான சபைத் பகுதியில் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த முக்கிய தளபதி அல்தாவில் கொல்லப்பட்டது காரணமாக இந்த போர் தீவிரமடைந்துள்ளது என்றும் இந்த சண்டை எல்லையில் இனி ஓயாது என்றும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.