இந்தியாவில் பெரிய சம்பவம் நிகழும் - ஹிண்டன்பெர்க் எச்சரிக்கை

August 10, 2024

இந்தியாவுக்கு பெரிய அளவில் ஒரு நிகழ்வு காத்திருக்கிறது என்று ஹிண்டன்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரபல நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் நிறுவனம் இன்று அதிகாலை எக்ஸ் தளத்தில் ஒரு தகவல் அளித்துள்ளது. அதில் இந்தியாவுக்கு விரைவில் பெரிய நிகழ்வு ஒன்று காத்திருக்கிறது என்று கூறியுள்ளது. இந்த நிறுவனம் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியின் குழுமம் தொடர்பான முறைகேடுகளை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டது. இது இந்திய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அதானி […]

இந்தியாவுக்கு பெரிய அளவில் ஒரு நிகழ்வு காத்திருக்கிறது என்று ஹிண்டன்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரபல நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் நிறுவனம் இன்று அதிகாலை எக்ஸ் தளத்தில் ஒரு தகவல் அளித்துள்ளது. அதில் இந்தியாவுக்கு விரைவில் பெரிய நிகழ்வு ஒன்று காத்திருக்கிறது என்று கூறியுள்ளது. இந்த நிறுவனம் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியின் குழுமம் தொடர்பான முறைகேடுகளை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டது. இது இந்திய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அதானி நிறுவன பங்குகளின் விலை சரிவை சந்தித்தன. தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் கூறியது. ஆனால் தங்கள் அறிக்கை தவறானது என்றால் எங்கள் மீது அதானி குழுமம் வழக்கு தொடரலாம் என்று பதிலுக்கு ஹிண்டன்பெர்க் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த பதிவை தற்போது அந்த நிறுவனம் பதிவிட்டுள்ளது. இந்த தகவல் அதானி குழுமம் பற்றியதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu