கனடா - ராமர் கோவிலில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்

February 16, 2023

கனடா நாட்டில், ஒண்டாரியோ மாகாணத்தின் மிஸிசகோ நகரில் அமைந்துள்ள ராமர் கோவிலில், திங்கட்கிழமை அன்று, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் கோவிலில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும், கோவில் மதில் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்குள், ஒண்டாரியோவில் நடந்த 3வது இந்து கோயில் சேதம் நிகழ்வு இதுவாகும். எனவே, கனடாவில் வாழும் இந்திய மக்களிடையே இந்த […]

கனடா நாட்டில், ஒண்டாரியோ மாகாணத்தின் மிஸிசகோ நகரில் அமைந்துள்ள ராமர் கோவிலில், திங்கட்கிழமை அன்று, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் கோவிலில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும், கோவில் மதில் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்குள், ஒண்டாரியோவில் நடந்த 3வது இந்து கோயில் சேதம் நிகழ்வு இதுவாகும். எனவே, கனடாவில் வாழும் இந்திய மக்களிடையே இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கனடாவில், இந்து கோயில்கள் தொடர் அவமதிப்புக்கு உள்ளாகி வருவதால், இது தொடர்பாக விரைந்து விசாரிக்குமாறு கனடா அதிகாரிகளை இந்திய தூதரகம் வலியுறுத்தி உள்ளது. டொரன்டோவில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ராமர் கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவிக்கிறோம். இது தொடர்பாக, விரைந்து விசாரணை செய்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu