நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் நேற்று முதல் கன மழை பெய்து வருவதால் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதில் சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, நாகை மாவட்டத்தில் நாகை மற்றும் கீழ்வேளூர் ஆகிய இரண்டு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.














