கேரளாவில் வரலாறு காணாத அளவில் வெயில் சுட்டெரித்து வருவதால் அங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு கேரளா அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் கேரளா அரசு அங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு மே 6ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை கூட்டத்திற்கு கேரளா அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. மேலும் காலை 11 மணி முதல் 3 மணி வரை கோடைகால விடுமுறை வகுப்புகளின் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கட்டுமான தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் வேலை நேரத்தை மாற்றிக் கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.