ஹோண்டா கார்கள் விலை 30000 ரூபாய் வரை உயர்வு

December 16, 2022

ஜப்பானிய கார் உற்பத்தியாளரான ஹோண்டா, தனது அனைத்து மாடல் கார் விலைகளும் 30000 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 23ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. மூலப் பொருட்களின் விலை ஏற்றம், உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் எதிர்காலத்தில் கொண்டுவரப்பட உள்ள கார்பன் வெளியேற்ற கட்டுப்பாடுகள் போன்றவற்றை எதிர்கொள்ள, இந்த விலையேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் ஒவ்வொரு கார் மாடலுக்கும், உயர்த்தப்படும் விலைகளில் மாற்றம் இருக்கும் […]

ஜப்பானிய கார் உற்பத்தியாளரான ஹோண்டா, தனது அனைத்து மாடல் கார் விலைகளும் 30000 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 23ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. மூலப் பொருட்களின் விலை ஏற்றம், உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் எதிர்காலத்தில் கொண்டுவரப்பட உள்ள கார்பன் வெளியேற்ற கட்டுப்பாடுகள் போன்றவற்றை எதிர்கொள்ள, இந்த விலையேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் ஒவ்வொரு கார் மாடலுக்கும், உயர்த்தப்படும் விலைகளில் மாற்றம் இருக்கும் என்று ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு துணைத் தலைவர் குணால் பேல் தெரிவித்துள்ளார். மேலும், கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த பிரத்தியேக கருவிகள் பொருத்தப்படும் எனவும், வாகனங்களின் செமி கண்டக்டர்கள் தரம் உயர்த்தப்படும் எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே, ஜனவரி முதல், மாருதி, ஹூண்டாய், டாடா, பென்ஸ், ஆடி, ரெனால்ட், கியா நிறுவனங்களின் கார் விலைகள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu