போன் பே மற்றும் லங்கா பே கூட்டணி - எளிமையாகும் யுபிஐ பரிவர்த்தனை

May 17, 2024

போன் பே நிறுவனமும் லங்கா பே நிறுவனமும் கூட்டணியில் இணைந்துள்ளன. எனவே, இனிமேல் இலங்கைக்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் எளிதாக யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். அவர்கள், இலங்கையில் உள்ள லங்கா பே கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, போன் பே மூலம் பணம் செலுத்த முடியும். இது இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. யுபிஐ பண பரிவர்த்தனை மூலம் அதிக நன்மைகள் ஏற்பட்டுள்ளன. ரொக்க பணத்தை கையில் […]

போன் பே நிறுவனமும் லங்கா பே நிறுவனமும் கூட்டணியில் இணைந்துள்ளன. எனவே, இனிமேல் இலங்கைக்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் எளிதாக யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். அவர்கள், இலங்கையில் உள்ள லங்கா பே கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, போன் பே மூலம் பணம் செலுத்த முடியும். இது இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

யுபிஐ பண பரிவர்த்தனை மூலம் அதிக நன்மைகள் ஏற்பட்டுள்ளன. ரொக்க பணத்தை கையில் எடுத்துச் செல்வதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். அந்த வகையில், சுற்றுலா செல்லும் போது யுபிஐ பரிவர்த்தனை மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. ஆனால், நாடு விட்டு நாடு செல்லும் போது பணத்தை எடுத்துச் செல்வது அவசியமாகிறது. இலங்கைக்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இனிமேல் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை. போன் பே மற்றும் லங்கா பே இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதால், யுபிஐ பரிவர்த்தனை எளிமையாக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu