ஹார்லிக்ஸ் பானத்தை தயாரித்து வந்த ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் அதை ஆரோக்கிய பானம் என்ற பிரிவிலிருந்து நீக்கி உள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், ‘பால் மற்றும் தானியங்களை கொண்டு தயாரிக்கப்படும் பானங்களை ஆரோக்கிய பானம் என்ற வகையில் குறிப்பிடக் கூடாது’ என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ஏற்று, ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், ஹார்லிக்ஸ், பூஸ்ட் உள்ளிட்ட தனது பிராண்டுகளில் இருந்து ‘ஹெல்த் ட்ரிங்க்’ மற்றும் ‘எனர்ஜி ட்ரிங்க்’ என்ற லேபிளை நீக்கி உள்ளது. இந்த வகை பானங்கள், இனிமேல் ‘ஃபங்ஷனல் நியூட்ரிஷனல் ட்ரிங்க்’ என்று அழைக்கப்படும். அதாவது, இவை ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்க உதவும் பானங்கள் ஆகும்.