கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை, இந்தியாவின் முக்கிய 7 நகரங்களில், வீடுகள் விற்பனை 36% உயர்ந்து உள்ளதாக, அனரோக் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், டெல்லி என் சி ஆர், மும்பை, புனே ஆகிய 7 நகரங்களில், கிட்டத்தட்ட 1.15 லட்சம் எண்ணிக்கையில் வீடுகள் விற்பனை பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டில், கிட்டத்தட்ட 85000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நகரங்களின் வரிசையில், புனே நகரில் 65%, டெல்லி என் சி ஆர் 7%, மும்பை 48%, பெங்களூரு 31%, சென்னை 44%, ஹைதராபாத் 21%, கொல்கத்தா 20% என்ற விகிதத்தில் வீடுகள் விற்பனை உயர்ந்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் முறையே, 20680, 16450, 38090, 15050, 5490, 13570, 5780 வீடுகள் மேற்குறிப்பிட்ட நகரங்களில் விற்கப்பட்டுள்ளன.