செங்கடல் பகுதியில் எம் க்யூ 9 வகையை சேர்ந்த அமெரிக்க ட்ரோன் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அமெரிக்காவுக்கு சொந்தமான அதிநவீன ஆளில்லா விமானத்தை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதுகுறித்து பென்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் செங்கடல் பகுதியில் எம் க்யூ 9 வகையை சேர்ந்த அமெரிக்க ட்ரோன் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த தாக்குதல் ஏமன் பகுதியில் இருந்து நடத்தப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எம் இக் யு 9 ரக ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே சர்வதேச வானிலையில் பறந்து கொண்டிருந்த அந்த ரக விமானத்தை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த நவம்பர் மாதம் சுட்டனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். அதன் காரணமாக அவர்கள் செங்கடல் பகுதியில் வரும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து வான்வழி தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது.