அண்மைக்காலமாக அதிக எண்ணிக்கையில் சூரிய புயல்கள் பூமியை தாக்கி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் தீவிர சூரிய புயல் ஒன்று பூமியை தாக்கியுள்ளது.
தேசிய கடல் மற்றும் வளிமண்டலம் சார்ந்த நிர்வாக அமைப்பு இது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2 நாட்களில், சூரிய புயல் காரணமாக மின் இணைப்புகளில் பாதிப்புகள் நேர்ந்துள்ளன. மேலும், இந்த சூரிய புயல், பூமியின் புவி காந்த அட்ச ரேகையில் 65 டிகிரியில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கனடா, அலாஸ்கா நாடுகளில் ஆரோராக்கள் எனப்படும் இயற்கை மின் நிகழ்வுகள் தென்பட்டன.
அதிகரித்து வரும் சூரிய புயல்கள், சூரியன் குறித்த ஆராய்ச்சியின் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா, இஸ்ரோ போன்ற அமைப்புகள் இதில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.